வீட்டில் பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்


வீட்டில் பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் நாரணாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் முத்தமிழ் காலனியில் வசித்து வரும் செல்வம் என்பவரின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். இதில் உரிய அனுமதியின்றி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை செல்வம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story