வீட்டிற்குள் பட்டாசு கொளுத்தி போட்டதால் துணி-பாத்திரங்கள் எரிந்து நாசம்


வீட்டிற்குள் பட்டாசு கொளுத்தி போட்டதால் துணி-பாத்திரங்கள் எரிந்து நாசம்
x

வீட்டிற்குள் பட்டாசு கொளுத்தி போட்டதால் துணி-பாத்திரங்கள் எரிந்து நாசமானது.

திருச்சி

திருச்சி பெரியமிளகுபாறை புது தெருவில் வசித்து வருபவர் பொன்னர் (வயது 43). நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் இவருடைய வீட்டிற்குள் பட்டாசை கொளுத்தி போட்டுவிட்டு ஓடிவிட்டார். இதில் வீட்டிற்குள் இருந்த துணி மற்றும் பாத்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் ஆகும். இது குறித்து பொன்னர், செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story