தீயணைப்பு படை வீரர் திடீர் சாவு
கூடங்குளத்தில் தீயணைப்பு படை வீரர் திடீரென இறந்தார்.
திருநெல்வேலி
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 47). இவர் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டப்பணியில் தீயணைப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இரவில் பணியில் இருந்த போது செல்லத்துரை திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அணுமின் நிலைய டவுன்ஷிப் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்லத்துரை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story