தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி


தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
x

தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்,

திருச்சி

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதையொட்டி மழை வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. தீயணைப்புத்துறை உதவி கோட்ட அலுவலர் லியோ ஜோசப், நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வெள்ள பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும், மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ரப்பர் படகு மற்றும் தீயணைப்பு உபகரணங்களுடன் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி ஆற்றில் ரப்பர் படகில் சென்று தண்ணீரில் சிக்கியவரை மீட்பது குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினார்கள். இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் காவிரி ஆற்றில் நவல்பட்டு தீயணைப்பு நிலையம் சார்பில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதேபோல் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், மாத்தூர் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது.


Next Story