நெல்லையில் தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லையில் தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினார்கள்.
திருநெல்வேலி
நெல்லையில் குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றுகிறார். விழாவை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார், தீயணைப்பு படையினர், என்.சி.சி. மாணவர்கள் கடந்த சில நாட்களாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று காலையில் நெல்லை தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் 25 வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story