கூடலூரில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை


கூடலூரில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
x
தினத்தந்தி 23 May 2023 3:45 AM IST (Updated: 23 May 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையையொட்டி கூடலூரில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடந்தது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலங்களில் ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கூடலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடந்தது. நிலைய அலுவலர் மார்டின் தலைமையில் கூடலூர் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் இரும்புப் பாலம் பகுதியில் ஓடும் பாண்டியாற்றில் வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மழை வெள்ள மீட்பு பணிகள், பாதுகாப்பு வழிமுறைகள், முதல் உதவி அளிப்பது, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது போன்ற பல்வேறு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. உடனடி மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்ளூர் தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story