ஊட்டியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை


ஊட்டியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
x
தினத்தந்தி 19 May 2023 3:15 AM IST (Updated: 19 May 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதை அடுத்து, ஊட்டியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி

தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதை அடுத்து, ஊட்டியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தென்மேற்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்வது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர், கோடை மழை 230 மில்லி மீட்டர் பெய்யும். நீலகிரியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 124 சதவீதம் கூடுதலாக பெய்தது.

இந்த ஆண்டு நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒத்திகை பயிற்சி

இந்தநிலையில் நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) அண்ணாதுரை உத்தரவின் பேரில், மாவட்ட உதவி அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல் படி, வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது போன்ற ஒத்திகை பயிற்சி ஊட்டி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடந்தது. நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தங்களை காத்துக்கொண்டு மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

மேலும் வெள்ளத்தின் போது தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்புவது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

மழை காலங்களில் மின் விபத்து ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், மின் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி?, மழை பெய்யும் போது மரத்தின் அடியில் நிற்கக்கூடாது என்றனர். முன்னதாக மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்து செயல்விளக்கம் அளித்தனர்.


Next Story