தீயணைப்பு வீரர்கள் செங்கல்பட்டுக்கு பயணம்
மீட்பு பணிக்காக வேலூர் தீயணைப்பு வீரர்கள் செங்கல்பட்டுக்கு சென்றனர்.
வேலூர்
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு மீட்பு பணிக்காக வேலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாட பொருட்களுடன் 20 தீயணைப்பு வீரர்கள் நேற்று செங்கல்பட்டு மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவசரகால மீட்பு வாகனமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திலும் மீட்பு பணிக்கு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story