முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்


முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்
x

முதல்- அமைச்சர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 30-31-வது வார்டு பகுதி மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தெற்கு தெரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொகுதி ஒருங்கிணைப்பாளரும், நகர்மன்ற உறுப்பினருமான ஜெயகவிதா, நகர்மன்ற உறுப்பினர் சுசீலாதேவி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தி.மு.க. வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் முத்துவேல் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story