முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு


முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்ப்பு
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற

நாகப்பட்டினம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந்தேதி கடைசி நாள் என்றும் கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிரிக்கெட் சேர்ப்பு

நாகை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்- அமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்துகொள்ளலாம்.

மேலும், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

23-ந்தேதி கடைசி நாள்

இதற்காக விண்ணப்ிக்க வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடத்தப்படும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story