முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்


முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுைற மாவட்டத்தில் இன்று முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுைற மாவட்டத்தில் இன்று முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள்

2022-2023-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தொடங்க உள்ளது. 12 முதல் 19 வயதுடைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, சிலம்பம் (சாய் விளையாட்டரங்கம், ராஜன் தோட்டம்), நீச்சல், (மாவட்ட விளையாட்டரங்கம், நாகப்பட்டினம்) மேசைப்பந்து, (துரோணாலயா அகாடமி, சீர்காழி) இறகுபந்து (ஷரப் இறகுப்பந்து அகாடமி), மட்டைப்பந்து (மினி ஸ்டேடியம், காட்டுச்சேரி) மற்றும் வளைகோல் பந்து (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீர்காழி) ஆகிய போட்டிகள் இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, சிலம்பம், (சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம்) நீச்சல், (மாவட்ட விளையாட்டரங்கம், நாகப்பட்டினம்) மேசைப்பந்து, (துரோணாலயா அகடாமி, சீர்காழி) இறகுப்பந்து (ஷரப் இறகுப்பந்து அகாடமி), மட்டைப்பந்து (மினி ஸ்டேடியம், காட்டுச்சேரி) மற்றும் வளைகோல் பந்து (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சீர்காழி) ஆகிய போட்டிகள் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

பொதுப்பிரிவினர்

பொதுப்பிரிவினர் ஆடவர் மற்றும் மகளிருக்கு 15 முதல் 35 வயது வரை கபடி, சிலம்பம், தடகளம், கையுந்துபந்து (சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம்), இறகுபந்து, (ஷரப் இறகுப்பந்து அகாடமி) மற்றும் மட்டைப்பந்து (மினி ஸ்டேடியம், காட்டுச்சேரி) ஆகிய போட்டிகள் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும், மாற்றுத் திறனாளிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயது வரம்பு இல்லை) மாற்றுத்திறனாளிகளுக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் இறகுபந்து போட்டிகளும், பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம் அடாப்டட் வாலிபால் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீட்டர் ஓட்டம், எறிபந்து போட்டிகளும், செவிதிறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், கபடி போட்டிகள் 15-ந்தேதி சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம் மயிலாடுதுறையில் நடைபெற உள்ளது.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள் ஆடவர் மற்றும் மகளிருக்கு (வயதுவரம்பு இல்லை) கபடி, தடகளம், கையுந்துபந்து, (சாய் விளையாட்டரங்கம், ராஜன்தோட்டம்) இறகுபந்து, (ஷரப் இறகுப்பந்து அகாடமி) மற்றும் செஸ் (சில்வர் ஜுபிளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை) ஆகிய போட்டிகள் வருகிற 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் போட்டிகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story