Normal
முதல்-அமைச்சரின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீட்டு விழா
கீழப்பாவூரில் முதல்-அமைச்சரின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு சாதனைகள், சட்டமன்ற உரைகள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புத்தகங்களை முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வெளியிட, முன்னாள் அமைச்சர் தங்கவேலு, முன்னாள் மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன், முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முத்துக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story