தடைக்காலம் முடிவடைந்தும் ஈரோட்டில் மீன்கள் விலை குறையவில்லை; வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை


தடைக்காலம் முடிவடைந்தும் ஈரோட்டில் மீன்கள் விலை குறையவில்லை; வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
x

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தும் ஈரோட்டில் மீன்களின் விலை குறையவில்லை. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000-க்கு விற்பனையானது.

ஈரோடு

ஈரோடு

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தும் ஈரோட்டில் மீன்களின் விலை குறையவில்லை. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000-க்கு விற்பனையானது.

மீன் மார்க்கெட்

ஈரோடு ஸ்டோனி பாலத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

அங்கு தூத்துக்குடி, ராமேசுவரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மீன் பிடி தடைக்காலம் இருந்ததால், மீன்களின் வரத்து குறைவாக இருந்தது. இதனால் மீன்களின் விலை உயர்ந்தது. ஒரு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை விலை ஏற்றம் அடைந்தது.

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து விட்டது. இருந்தாலும், ஈரோட்டுக்கு மீன்களின் வரத்து வழக்கம்போல் இல்லாமல் இந்த வாரமும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை நேற்று குறையாமல் விற்பனையானது.

விலை உயர்வு

ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,000-க்கும், வாவுல் மீன் ஒரு கிலோ ரூ.800-க்கும் விற்பனையானது. மீன்களின் விலை அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் குறைந்த அளவிலேயே மீன்களை வாங்கி சென்றார்கள்.

ஈரோட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

சங்கரா - ரூ.300, அயிலை - ரூ.250, கொடுவா - ரூ.500, கிளி மீன் - ரூ.450, சீலா - ரூ.500, நண்டு - ரூ.400, இறால் - ரூ.600.

இதேபோல் அணை மீன்களான லோகு, கட்லா, பாறை ஆகியன ஒரு கிலோ ரூ.180-க்கும், நெய் மீன் ரூ.150-க்கும் விற்பனையானது.


Related Tags :
Next Story