நெல் வயலில் மீன் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்


நெல் வயலில் மீன் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 Feb 2023 12:45 AM IST (Updated: 5 Feb 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நெல் வயலில் மீன் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்

நெல் வயலில் மீன் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல் வயலில் மீன் வளர்ப்பு

வேளாண்மை அறிவியல் நிலையம் நபார்டு வங்கியுடன் இணைந்து காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நெல் வயலில் மீன் வளர்ப்பு பற்றிய செயல் விளக்கம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தில் கலந்துகொண்டு பயன் தரும் விவசாயிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி ஆகிய 4 ஒன்றியங்களில் மொத்தம் 10 பயனாளிகள் வயல்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பாரம்பரிய நெல் ரகங்கள்

போர்வெல் வசதியுள்ள ஒரு ஏக்கர் நிலத்தின் கரையோரத்தில் அகழி எடுக்கப்பட்டு மீன் வளர்ப்பு செயல்படுத்தப்பட உள்ளது. மீதமுள்ள நடுப்பகுதியில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா அல்லது கருப்புகவுனி பயிர் செய்யப்படவேண்டும். இத்திட்டத்திற்கு தேவையான மீன் குஞ்சுகள் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை வழி இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட விவசாயிகள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பெயரில் பட்டா சிட்டா மற்றும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முதலில் வரும் 10 பயனாளிகளின் விண்ணப்பங்கள் வல்லுநர் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story