மீன்கள் விலை உயர்வு


மீன்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நேற்று மீன்கள் விலை உயர்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக நேற்று மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் ஏலம் நடைபெறவில்லை. இதனால் நேற்று காலையில் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் விளை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. ஆனால் சீலா, ஊளி, பாறை, சாளை, நெத்திலி போன்ற மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

திரேஸ்புரம் மீன் ஏலக்கூடத்தில் நேற்று விளை மீன் கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரையும், ஊளி மீன் கிலோ ரூ.400 வரையும், பாறை மீன் கிலோ ரூ.500 வரையும், நெத்திலி மீன் ஒரு கூடை ரூ.3 ஆயிரத்து 500 வரையும், சீலா மீன் கிலோ ரூ.ஆயிரத்து 300 வரையும், இறால் கிலோ ரூ.400 வரையும், நண்டு கிலோ ரூ.300 வரையும் விற்பனையானது. மீன் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையிலும் மீன்களுக்கு விலை இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதுபோல் பொதுமக்களும் விலையை பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர்.


Related Tags :
Next Story