வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு; அசைவ பிரியர்கள் ஏமாற்றம்


வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு; அசைவ பிரியர்கள் ஏமாற்றம்
x

வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு; அசைவ பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

புதுக்கோட்டை

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் அசைவ பிரியர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் மீன்களை வாங்க வந்திருந்தனர். ஆனால் மாண்டஸ் புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் குறைந்த அளவிலான மீன்களே விற்பனைக்கு வந்திருந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக முன்பு இருந்ததை விட கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை கூடுதல் விலைக்கு விற்பனை ஆனது. இதனால் அசைவ பிரியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி ஏமாற்றமடைந்தனர்.


Next Story