கடலில் தவறிவிழுந்து மீனவர் சாவு
முத்துப்பேட்டை அருகே கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழந்தார்.
திருவாரூர்
முத்துப்பேட்டை;
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் ஊராட்சி கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது54). மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் சேகர் நேற்று முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அப்பகுதி மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார். அலையாத்திக்காடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித் தீவு பகுதியில் கடலில் படகில் நின்றவாறு வலையை சேகர் வீசினார். அப்போது சேகர் திடீரென தடுமாறி கடலில் விழுந்து நீரில் மூழ்கினார். இதைக்கண்ட சகமீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story