விசைப்படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள்


விசைப்படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை மீன் பிடி தடைகாலம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

தற்போது வருகிற 14-ந் தேதியுடன் மீன்பிடி தடை காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி வைப்பார், தருவைகுளம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை, மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் மொத்தம் 416 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகளும், 81 பதிவு செய்யப்படாத விசைப்படகுகளும் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story