மீன்பிடித்த போது மயங்கி கடலில் விழுந்த மீனவர் பலி


மீன்பிடித்த போது மயங்கி கடலில் விழுந்த  மீனவர் பலி
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் அருகே மீன்பிடித்த போது மயங்கி கடலில் விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:


சேதுபாவாசத்திரம் அருகே மீன்பிடித்த போது மயங்கி கடலில் விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

மீனவர் சாவு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது54). நேற்று காலை 6 மணிக்கு இவர் பைபர் படகில் 3 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றுள்ளார். சுமார் 2 மைல் தூரத்தில், சேகர் கடலில் மீன்பிடிப்பதற்காக வலையை விரித்து கொண்டிருந்தார். அவருடன் வந்த சக மீனவர்கள் மற்றொரு பக்கம் வலையை கடலில் வீசி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

மீன்பிடித்து விட்டு சக மீனவர்கள் படகுக்கு திரும்பினர். அப்போது சேகர் மயங்கிய நிலையில் கடலில் மூழ்கி கிடந்துள்ளார். உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது சேகர் கடலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர போலீஸ் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேகர் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மீனவர் சேருக்கு காளியம்மாள் என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர்.


Next Story