தேங்காப்பட்டணம் அருகே சோகம் மனைவி இறந்த 18-வது நாளில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
தேங்காப்பட்டணம் அருகே மனைவி இறந்த 18-வது நாளில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கடை,:
தேங்காப்பட்டணம் அருகே மனைவி இறந்த 18-வது நாளில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மீனவர்
தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம்புத்தன்துறையை சேர்ந்தவர் அந்திரேயாஸ் (வயது 66), மீனவர். இவருடைய மனைவி மேரி. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்தநிலையில் மேரி கடந்த 18 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு தனிமையில் இருந்த அந்திரேயாஸ் மிகுந்த சோகத்தில் இருந்தார். மேலும் மது பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் வெகுநேரம் ஆகியும் அந்திரேயாசின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
தூக்கில் பிணம்
அப்போது அந்திரேயாஸ் வீட்டின் உள்ளே உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி இறந்த சோகத்தில் மீனவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.