பா.ஜனதா சார்பில் மீனவர் சந்திப்பு கூட்டம்
தொண்டியில் பா.ஜனதா சார்பில் மீனவர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தொண்டி,
தொண்டியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மீனவர்கள் சந்திப்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பா.ஜ.க.மாநில மீனவர் பிரிவு செயலாளர் நம்புராஜன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. திருவாடானை கிழக்கு ஒன்றிய தலைவர் துரை ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். அனைவரையும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் கருப்பசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் வெங்கடாசலம், மாநில மீனவர் பிரிவு துணைத்தலைவர் டாக்டர் சண்முகானந்தம், நமோ செயலி ஒருங்கிணைப்பாளர் ஷிவ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் மீன் வளம் காக்கவும் மீனவர்களின் வாழ்வாதாரம் உயரவும் பிரதமர் மோடி மீனவர்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் திருவாடானை மேற்கு மண்டல தலைவர் பிரபு, ஓ.பி.சி. அணி மாவட்ட துணை தலைவர் அஞ்சுகோட்டை ரமேஷ், மீனவர் பிரிவு மாவட்ட செயலாளர் சக்திவேல், பா.ஜனதா மூத்த காரிய கர்த்தா குமரேசன், தொண்டி சந்திரன், திருவாடானை கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர், துணைத்தலைவர்கள், வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் சந்திரகுமார், திருவாடானை கிழக்கு ஒன்றிய மீனவர் பிரிவு தலைவர் லெட்சுமணன், துணைத்தலைவர் வீர சக்தி, உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.