கடற்கரையில் 1 கி.மீட்டர் தூரம் ஏற்பட்டுள்ள சேற்றால் மீனவர்கள் அவதி


கடற்கரையில் 1 கி.மீட்டர் தூரம் ஏற்பட்டுள்ள சேற்றால் மீனவர்கள் அவதி
x

கடற்கரையில் 1 கி.மீட்டர் தூரம் ஏற்பட்டுள்ள சேற்றால் மீனவர்கள் அவதி

நாகப்பட்டினம்

வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தில் சுமார் 100 பைபர் படகுகள் உள்ளன. இந்த மீனவர்கள் தினமும் காலை வேளைகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று, மறுநாள் கரை திரும்புவார்கள். கடந்த 3 நாட்களாக கடற்கரை பகுதியில் சேறு காணப்பட்டது. நேற்று கடற்கரையோரம் 1 கிலோ மீட்டர் தூரமும், 3 அடி முதல் 4 அடிவரையும் சேறு கடற்கரையில் ஏற்பட்டு்ள்ளது. இதானால் படகை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் அவதியடைந்தனர். ஆனாலும் பைபர் படகை 2 மணிநேரம் போராடி மீனவர்கள் கடலுக்கு கொண்டு சென்றனர். இதனால் பிடித்த மீன்களை கரைக்கு கொண்டு வரமுடியாமலும் சிரமப்பட்டனர். இதுகுறித்து மீனவர்கள் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமனுக்கு தகவல் தெரிவித்தனர். வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம் ஏற்பாட்டில் மீனவர்கள் எளிதாக கடலுக்கு செல்ல வசதியாக பொக்லின் எந்திரம் மூலம் கடலில் ஏற்பட்டுள்ள சேற்றை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Related Tags :
Next Story