கவர்னர் மீனவ பிரதிநிதிகளை சந்திக்காமல் சென்றதால் அதிருப்தி


கவர்னர் மீனவ பிரதிநிதிகளை சந்திக்காமல் சென்றதால் அதிருப்தி
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் வருகை தந்த தமிழக கவர்னர் பாதிக்கப்பட்ட மீனவர் பிரதிகளை சந்திக்காமல் சென்றதை கண்டித்து அதிருப்தி அடைந்துள்ளதாக மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் வருகை தந்த தமிழக கவர்னர் பாதிக்கப்பட்ட மீனவர் பிரதிகளை சந்திக்காமல் சென்றதை கண்டித்து அதிருப்தி அடைந்துள்ளதாக மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

கவர்னர் மீது அதிருப்தி

ராமேசுவரம் அனைத்து மீனவ சங்க கூட்டம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவ சங்க நிர்வாகிகள் தேவதாஸ், சாம்சங், சகாயம், சைமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கவர்னர் ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தார். அவர் மீனவர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட மீனவ பிரதிநிதிகளை சந்திக்காமலே சென்றது மீனவர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை கவர்னர் கவனத்திற்கு எடுத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கடந்த 2018 முதல் 2023 வரை 5 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த 110 படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஒவ்வொரு படகுக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இலங்கை-இந்திய கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித்த பகுதிகளில் இலங்கை கடற்படை தொல்லை இல்லாமல் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும்.

போராட்டம்

2014 முதல் 2017 வரை இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிடிக்கப்பட்ட 30 படகுகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. உடனடியாக அதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் இலங்கை நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட நான்கு படகுகளை மீட்டு கொண்டு வருவதற்கான செலவு தொகையை அரசு வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வருகின்ற 25-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டாளல் 26-ந் தேதி தங்கச்சிமடத்தில் பெரும்பாலான மீனவ மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story