மீனவர்கள் தொடர் போராட்டம்


மீனவர்கள் தொடர் போராட்டம்
x

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் நேற்று படகில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் நேற்று படகில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் வேலைநிறுத்தம்

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை கிராமத்தில் கடந்த 10-ந்தேதி மாலையில் கடல் அரிப்பால் 30 மீட்டர் தூரம் வரையிலும் ஊருக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் அங்குள்ள மின்கம்பமும் சாய்ந்தது. மேலும் கடற்கரையில் நாட்டு படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கடற்கரையில் மனிதசங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

நேற்று முன்தினம் சபாநாயர் அப்பாவு கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்.

அப்போது அவர், கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க தேவையான ஏற்பாடுகளை அமைச்சர் துரைமுருகன் மூலம் செய்வதாகவும், தேவைப்பட்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவதாகவும் கூறினார்.

3-வது நாளாக ேபாராட்டம்

இருப்பினும், கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான ஆணை வரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் தெரிவித்தனர். நேற்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

ஏராளமான மீனவர்கள் மீன்பிடி படகுகளில் கருப்பு கொடியேற்றி கடற்கரையில் கூடி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து படகுகளில் சிறிது தூரம் கடலுக்குள் சென்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டக்குழு தலைவர் ரோசிங்டன் தலைமையில், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story