ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு

ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு
x

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு செய்து உள்ளனா்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்,

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு செய்து உள்ளனா்.

மீனவர்கள் கூட்டம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியான கரையூர்தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, மற்றும் தரகர் தெரு உள்ளிட்ட 4 கிராம மீனவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் கரையூர்தெரு மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.கூட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை நாகை, தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆவணங்கள்

எனவே வருகிற 23-ந் தேதி(திங்கட்கிழமை) மீனவர்கள் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மீனவர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 4 கிராம மீனவ கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story