கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மீனவர்கள் தர்ணா

கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மீனவர்கள் தர்ணா
x

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் உருவப்படங்களுடன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் உருவப்படங்களுடன் மீனவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தா்ணா போராட்டம்

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூம்புகார் மீனவ கிராமத்தை சேர்ந்த 15 மீனவர்கள் குடும்பத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் உருவப்படங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த கலெக்டர் மகாபாரதி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்ேபாது அவர், உங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கவில்லை என்று கிராம பஞ்சாயத்தார்கள் கூறுகிறார்கள், நீங்கள் இதுபோல் கூறுகின்றனரே என்று கேட்டார்.

மயங்கி விழுந்த பெண்

அதற்கு மீனவர்கள், கிராம பஞ்சாயத்தார்கள் உண்மையை மறைக்கின்றனர். தொழில் செய்ய எங்களை விடுவதில்லை எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சாப்பாட்டிற்கு வழியின்றி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக யார் தொந்தரவு செய்கிறார்களோ அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியபோது திடீரென்று ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story