மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மட்லீஸ் மீன்கள்
வேதாரண்யம் அருகே மீனவர்கள் வலையில் அதிக அளவில் மட்லீஸ் மீன்கள் கிடைத்துள்ளது. இந்த மீன்கள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலைபோனது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே மீனவர்கள் வலையில் அதிக அளவில் மட்லீஸ் மீன்கள் கிடைத்துள்ளது. இந்த மீன்கள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலைபோனது.
மட்லீஸ் மீன்கள்
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் இருந்து நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். பின்னர் இன்று அதிகாலை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு கரைக்கு திரும்பினர்.
அவர்களது வலையில் அதிக அளவு மட்லீஸ் மீன்கள் கிடைத்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக மீனவர்கள் வலையில் மீன்கள் குறைந்த அளவு கிடைத்த நிலையில் இன்று அதிக அளவு மட்லீஸ் மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முழு வீச்சில்...
இந்த மட்லீஸ் மீன்கள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விலை போனதாலும், அதிக அளவில் கிடைப்பதாலும் நாளை முழு வீச்சில் மட்லீஸ் மீன்கள் பிடிக்க செல்ல உள்ளோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.