மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x

கடல் சீற்றம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்;

தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

காற்றழுத்த தாழ்வு நிலை

தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைபட்டிணம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டிணம், கணேசபுரம் உட்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4500 நாட்டுப் படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப் படகுகளும் உள்ளன.

மீன்பிடிக்க செல்லவில்லை

விசைப்படகுகள் திங்கள், புதன், சனி, ஆகிய நாட்களிலும் பிற தினங்களில் நாட்டுப் படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வள துறை உதவி இயக்குநர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் கடல் சீற்றமாக உள்ளதாலும் 3- வது நாளாக தஞ்சை மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story