முடசல் ஓடை கடற்கரையோரத்தில் வேலி அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு


முடசல் ஓடை கடற்கரையோரத்தில் வேலி அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முடசல் ஓடை கடற்கரையோரத்தில் வேலி அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

கடலூர்

புவனகிரி:

முடசல் ஓடை கடற்கரையோரத்தில் மீன் இறங்குதளம் அருகில் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தினர் வேலி அமைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று டிராக்டரில் கருங்கல் ஏற்றி வந்து கொட்டியுள்ளனர். இது பற்றி அறிந்ததும் முடசல் ஓடை மற்றும் சூர்யா நகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள், கிராம தலைவர் ஜெகநாதன், சூர்யா நகர் தலைவர் ராஜேந்திரன், விசைப்படகு சங்க தலைவர் தமிழ்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், மீன் இறங்குதளம் விரிவுப்படுத்தும்போது, எங்கள் கிராமத்திற்கு இடம் தேவைப்படும் என்றும், இந்த பகுதியில் வேலி அமைக்க கூடாது என்றும் கோஷமிட்டனர்.

இதையடுத்து டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story