மீனவர்களுக்கு விசைப்படகு இயக்க பயிற்சி அளிக்க வேண்டும்
நாகையில் மீனவர்களுக்கு விசைப்படகு இயக்க பயிற்சி அளிக்க வேண்டும் இந்திய தேசிய மீனவர் சங்கம் கோரிக்கை
நாகப்பட்டினம்
இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் கீச்சாங்குப்பம் ராஜேந்திரன் நாட்டார், சென்னை மீன்வளத்துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசு மீன்வளத்துறை ஆணையம் மீனவர் நலனில் அக்கறை கொண்டு, விசைப்படகுகளை இயக்க மீனவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் கடல் மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மூலம் பயிற்சி பெற்று சான்றிதழ் உள்ளவர்கள்தான், வருங்காலத்தில் கடலில் விசைப்படகுகளை இயக்க முடியும் என்ற நிலை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மீனவர்களின் நலன் கருதி மீனவர்களுக்கு விசைப்படகு இயக்க பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story