அரசிராமணி குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் முற்றுகை
அரசிராமணி குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில், ஏரிகளை குத்தகை விட வலியுறுத்தி மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தேவூர்:
மீனவர் கூட்டுறவு சங்கம்
தேவூர் அருகே அரசிராமணி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பொன்னுசமுத்திரஏரி, நாச்சம்பட்டி ஏரி ஆகியவற்றில் மீன் வளர்த்து மீன் பிடிக்க குத்தகை விட வலியுறுத்தி அரசிராமணி குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது சங்க எல்லைக்கு உட்பட்ட பொதுப்பணித்துறை ஏரிகளான நாச்சம்பட்டி ஏரி, பொன்னுசமுத்திர ஏரி ஆகிய 2 ஏரிகளிலும் கடந்த 7 ஆண்டுகளாக அரசிராமணி செட்டிபட்டி மீனவர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு மீன் வளர்த்து மீன் பிடிக்க குத்தகை விடப்பட்டு வந்தது.
குத்தகை
வருகிற 5 ஆண்டு காலத்திற்கு அரசு நிர்ணயித்த குத்தகை தொகை, நலவாரிய தொகை அனைத்தும் கட்டுவதற்கு தயாராக உள்ளோம். எனவே அரசிராமணி செட்டிபட்டி மீனவர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ஏரியை குத்தகைக்கு விட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.