10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை.
மீனவ கிராமங்கள்
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரிபட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேசபுரம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் உள்ளனர். விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலமாக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.
4,500 நாட்டுப்படகுகள்
4,500 நாட்டுப் படகுகள் உள்ளன. மல்லிபட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 146 விசைப் படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள்.
மற்ற நாட்களில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
பாதுகாப்பாக...
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.