வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:வேதாரண்யம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:வேதாரண்யம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 29 Jan 2023 1:00 AM IST (Updated: 29 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வேதாரண்யம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி மீனவர்கள் பைபர் படகுகள் எனப்படும் சிறிய வகை படகுகளில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து 3 நாட்கள் கடல் கடும் சீற்றமாக இருந்தது. இதனால் மீனவர்கள் தொடர்ந்து 3 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தற்போது வேதாரண்யம் பகுதியில் கடல் கடும் சீற்றமாக காணப்படுவதுடன் கடலில் பலத்த காற்று வீசி வருவதால் நேற்று வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.


Next Story