பையூர் வண்ணாங்குட்டை ஏரி தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் செத்தன-கலெக்டர் தகவல்
பையூர் வண்ணாங்குட்டை ஏரி தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மீன்கள் செத்ததாக கலெக்டர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூர் ஊராட்சி வண்ணாங்குட்டை ஏரியில் கடந்த ஜூன் மாதம் மீன்கள் செத்து மிதந்தன. இதற்கான காரணம் குறித்து பாரூர் மீன்வள ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆராய்ச்சியில் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததற்கு, தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததே காரணம் என தெரியவந்தது. மேலும் ஏரியில் அளவுக்கு அதிகமாக மீன்கள் வளர்க்கப்பட்டதும், அவற்றுக்கு உணவாக பச்சை காய்கறிகள், சர்க்கரை ஆலை கழிவுகள் வழங்கப்பட்டதும் தான் மீன்கள் இறப்புக்கு காரணம் ஆகும். இறந்த மீன்களை அப்புறப்படுத்தவும், உரிய வழிகாட்டுதல்படி மீன்களை வளர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story