குருவியேந்தல் கிராமத்தில் மீன்பிடி திருவிழா
குருவியேந்தல் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ேபாட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர்.
காரியாபட்டி,
குருவியேந்தல் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ேபாட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர்.
மீன்பிடி திருவிழா
நரிக்குடி அருகே குருவியேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சென்ற ஆண்டு இந்தப்பகுதியில் நல்ல மழை பெய்து கண்மாய்கள் பெருகின. இந்தப்பகுதியில் நெல் விளைச்சல் அமோகமாக விளைந்திருந்தன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு நரிக்குடி பகுதியில் மழையினால் அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் பெருகியது. இந்நிலையில் நரிக்குடி அருகே குருவியேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாயில் தண்ணீர் வற்றிய பிறகு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மீன்பிடி திருவிழா நடத்தினர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த மீன்பிடி திருவிழாவில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். மேலும் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட ஒவ்வொருவர் வலையிலும் 3 முதல் 5 கிலோ வரையிலான மீன்கள் சிக்கின.
இந்த கண்மாயில் கெண்டை, கெழுத்தி, அயிரை, குறவைபோன்ற பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிடித்து சென்றனர்.