சிறுபாக்கம் அருகே மீன்பிடி திருவிழா - 10 கிராம மக்கள் பங்கேற்பு


சிறுபாக்கம் அருகே மீன்பிடி திருவிழா - 10 கிராம மக்கள் பங்கேற்பு
x

சிறுபாக்கம் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஒரகூர் கிராமத்தில் பெரிய ஏரியில் மீன் பிடித்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் சிறுப்பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த வடபாதிபுதூர், கொத்தனூர், ராயர் பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகத்துடன் ஏரியில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடித்தனர்.

இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, கெண்டை, விறால், ஜிலேபி, கட்லா ஆகிய மீன் வகைகள் கிடைத்தன. இதனால் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு சென்றனர்


Next Story