மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மீன் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ஜீசஸ் கிறிஸ்டி (வயது 29), மீன் வியாபாரி, இவர் நேற்று முன்தினம் பகல் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அறைக்குள் சென்றவர் இரவு ஆனபின்பும் உணவு சாப்பிட வராததால், அறைக்கதவை அவர் மனைவி தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்களின் உதவியோடு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு ஜீசஸ் கிறிஸ்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது,

இதுபற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story