நாகர்கோவிலில்மீன் வியாபாரி 'திடீர்' சாவு


நாகர்கோவிலில்மீன் வியாபாரி திடீர் சாவு
x
தினத்தந்தி 3 Jan 2023 2:29 AM IST (Updated: 3 Jan 2023 1:01 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில்மீன் வியாபாரி 'திடீர்' சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கீழப்பெருவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51), மீன் வியாபாரி. இவா் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றார். அப்போது கிருஷ்ணமூர்த்தி திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தி 'திடீர்' சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story