கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் மன்னர் ராஜகோபால தொண்டைமான் அரண்மனையில் இயங்கி வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனப்பகுதி அதிகமாக உள்ளது. அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய கட்டிடங்களில் கலெக்டர் அலுவலகம் சார்ந்த துறைகள் செயல்படுகின்றன. இந்த நிலையில் கலெக்டர் அறை வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இதுவரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்தது. தற்போது கட்டிடம் மற்றும் வளாகப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அரண்மனை கட்டிடத்தில் முகப்பு பகுதியிலும், அலுவலக வளாகத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கண்காணிப்பு கேமராக்கள் 20-க்கும் மேற்பட்டவை பொருத்தப்படுகிறது. இதில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.