வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் தீயணைப்பான்கள் பொருத்தம்


வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் தீயணைப்பான்கள் பொருத்தம்
x

வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் தீயணைப்பான்கள் பொருத்தப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் குடோன் அமைந்துள்ளது. இங்கு 24 தீயணைப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் செயல்திறன் காலாவதியாகும் நிலையில் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் கலெக்டர் குமாரவேல்பாண்டின் தலைமையில் குடோன் திறக்கப்பட்டு தீயணைப்பான்கள் வெளியே எடுக்கப்பட்டு புதுப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் 24 தீயணைப்பான்களும் புதுப்பிக்கப்பட்டு நேற்று கொண்டுவரப்பட்டது. இதனை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தலைமையில் குடோன் திறக்கப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கவிதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story