ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐந்து கருட சேவை


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐந்து கருட சேவை
x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்று ஐந்து கருடசேவை நடந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்று ஐந்து கருடசேவை நடந்தது.

மங்களாசாசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 5-ம் திருவிழாவான ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு பெரியாழ்வார் ஆண்டாள் கோவிலில் இருந்து புறப்பட்டு ஆடிப்பூர மண்டபத்தை வந்து அடைந்தார். அதன் பிறகு பெரிய பெருமாள், திருத்தங்கல் பெருமாள், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், ெரங்கமன்னார், ஆகியோரை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டாள் வீற்றிருக்க, பெரியாழ்வார், ஐந்து பெருமாளுக்கும் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐந்து கருடசேவை

அதன் பிறகு இரவு 10:30 மணிக்கு ஐந்து கருடசேவை நடந்தது. கருட வாகனங்களில் ஐந்து பெருமாள் எழுந்தருளி மாட வீதிகள், ரத வீதிகள் வழியாக உற்சவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒயிலாட்ட குழுவினர் மற்றும் கோலாட்ட குழுவினர் கோலாட்டம் ஆடியபடியும், பஜனை குழுவினர் பஜனை பாடிய படியும், வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story