அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா
தாணிக்கோட்டகம் அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா, ஆண்டுவிழா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிங்காரம் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். மேலும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் அன்பழகபாண்டியன், பொருளாளர் சுடர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனிதா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.