அரபிக் கல்லூரியில் ஐம்பெரும் விழா
உடன்குடி அரபிக் கல்லூரியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி பெரிய தெரு இமாம் மகளிர் அரபிக் கல்லூரியில் 18- வது பட்டமளிப்பு விழா முஸ்லீம்மாத இதழ் வெளியீட்டு, மாணவியர் சொற்பயிற்சி மன்ற 557 -வது நிறைவு, இஸ்லாமிய வரலாற்றுக் கண்காட்சி திறப்பு, 25 -வது ஆண்டு நிறைவு ஆகிய ஐம்பெரும் விழாக்கள் நான்கு நாட்கள் நடைபெற்றது.
கல்லூரி நிறுவனர் அபு உபைதா தலைமை தாங்கினார். வரலாற்றுக் கண்காட்சியை த.மு.மு.க., மற்றும் ம.ம.க. மாநில நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார்.விழாவில் பெண்களுக்கு சிறப்பு பயான், மாணவிகளின் சிற்றுரைகள், மாணவிகள், உலமாக்களின் பட்டிமன்றங்கள், கருத்தரங்கம், பல்வேறு அரபிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் ஜஹபர் சாதிக் சிராஜி வாசித்தார். முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத் தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக், தையல் சான்றிதழ்களை ஜக்கரியாவும், வழங்கினர். கல்வியின் நோக்கம், ஓழுக்கமான வாழ்க்கைக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் ஆகியவை குறித்து ஒய்வு பெற்ற மாவட்ட வருவாய் ஆலுவலர் ஹாஜி அப்துல் கரீம் பேசினார். உடன்குடி ஒன்றிய அளவில் பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் திரளான இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.