கூட்டமாக இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?


கூட்டமாக இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?
x

கூட்டமாக இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

திருப்பூர்

வெள்ளகோவில்

திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று வெள்ளகோவில் ஆகும். நூல் மில்கள், விசைத்தறி கூடங்கள், ஆயில் மில்கள், அரிசி ஆலைகள், நிதிநிறுவனங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் என உள்ளன.

வெள்ளகோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வந்து தங்கி வேலை செய்து வருகின்றனர். வெள்ளகோவில் நகர் பகுதி காலை மாலை நேரங்களில் எப்போதும் பரபரப்பாகவும், கூட்டமாகவும் இருக்கும். ஏதேனும் குற்ற சம்பவமோ, வாகன விபத்தோ நடந்தால் பிற மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எங்கு வேலை செய்து வருகின்றனர் என அவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஆகையால் வெள்ளகோவில் நகர் பகுதியில் முக்கியமாக போக்குவரத்து அதிகம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-----------


Next Story