விளம்பர போர்டு- கொடிக்கம்பங்கள் சேதம்


விளம்பர போர்டு- கொடிக்கம்பங்கள் சேதம்
x

முத்துப்பேட்டையில் விளம்பர போர்டுகள்- கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையில் விளம்பர போர்டுகள்- கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொடிக்கம்பங்கள் சேதம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த மாதம் த.மு.மு.க. சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் நகர் முழுவதும் இரும்பு கம்பிகளால் ஆன கொடிக்கம்பங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் குண்டாங்குளம் அருகில் உட்பட 3 இடங்களில் இருந்த த.மு.மு.க. இரும்பு கொடிக்கம்பங்களை யாரோ மர்ம நபர்கள் உடைத்து எறிந்து விட்டு சென்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நகர தலைவர் முகமதுஅலீம் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆம்புலன்ஸ் சேதம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் மீண்டும் புதுத்தெரு த.மு.மு.க. அலுவலக வாசலில் இருந்த கொடிக்கம்பம் மற்றும் முகைதீன் பள்ளி தெரு, மரைக்காயர் தெரு, அரபு சாஹீப் பள்ளி, குட்டியார் பள்ளி, அரசர்குளம், செம்படவன்காடு ெரயில்வே கேட் அருகில் உள்பட 6 இடங்களில் இருந்த த.மு.மு.க. கொடிக்கம்பங்களை சேதப்படுத்தி உடைத்து எறிந்தனர். மேலும் பங்களா வாசல் பேட்டை சாலையில் த.மு.மு.க. ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்தில் இருந்த முகப்பு விளம்பர பேனரை கிழித்து எறிந்து அங்கிருந்த ஆம்புலன்சையும் சேதப்படுத்தி சென்றனர்.

கைது

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் த.மு.மு.க.வினர் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் த.மு.மு.க. நகர தலைவர் முகமதுஅலீம் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா மூலம் கிடைத்த காட்சிகளை வைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி பேரூராட்சி கவுன்சிலர் தமிம்அன்சாரி(வயது32), கிளை நிர்வாகிகள் முகமதுரபீக்(35), முகமது அசன்(28) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.இந்தநிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம் அருகே இருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து த.மு.மு.க. நிர்வாகி முஸ்தாக்அகமது(52) என்பவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story