கொடி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்


கொடி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

நாட்டறம்பள்ளியில் கொடி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் சார்பில் நேற்று கொடி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பூபதி கவுண்டர் தெரு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, ஆர்.சி.எஸ். மெயின் ரோடு வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் ஊர்வலம் முடிந்தது. ஊர்வலத்தின்போது பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள், சாலையோரம் உள்ள கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து கொடி நாள் நிதி செலுத்தினர்.

இந்த ஊர்வலத்தில் மண்டல துணை தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி, கவுரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story