புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம்


புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம்
x

புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கைநல்லூரில் வேளாங்கண்ணி பேராலயத்தின் உப ஆலயங்களில் ஒன்றான பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மற்றும் அந்தோணியார் சொரூபம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைதொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் கொடியை புனிதம் செய்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றி வைத்தார். அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. அதன் பின்னர் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.


Next Story