புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்


புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
x

பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் பாளை. மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மாலை ஆராதனையை நடத்தினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெப மாலையும், நவநாள் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு புனித அந்தோணியார் திருவுருவ பவனி நடக்கிறது. திருவிழா நிறைவு நாளன்று காலை 6.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்துகொண்டு ஆராதனையையும், திருவிழா கூட்டு திருப்பலியையும் நடத்துகிறார்.

விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜேம்ஸ், அருட் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.


Next Story