எச்.கோபிநாதம்பட்டியில் தி.மு.க. கொடியேற்று விழா
எச்.கோபிநாதம்பட்டியில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
தர்மபுரி
அரூர்:
அரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி எச்.கோபிநாதம்பட்டியில் கொடியேற்று விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சவுந்தரராசு தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி கட்சி கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு வேட்டி- சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கட்சி நிர்வாகிகள் சூர்யா தனபால், கீரை விஸ்வநாதன், பழனி, சிதம்பரம், பிரபாகரன், சேகர், பெரியதம்பி, சின்னசாமி, முருகேசன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story