நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா


நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நவம்பர் புரட்சிதின கொடியேற்று விழா நடந்தது.

தஞ்சாவூர்

திருவையாறு;

திருவையாறு தேரடியில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றியசெயலாளர் இளங்கேஸ்வரன் தலைமை தாங்கினாா். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தங்க.சக்ரவர்த்தி கொடியேற்றி வைத்து நவம்பர் புரட்சித்தினத்தை பற்றி பேசினார். விழாவில் ஒன்றிய துணை செயலாளர் நித்தியானந்தம், மாதர்சங்க பொறுப்பாளர் பரிமளா, விவசாய சங்க பொறுப்பாளர் பேச்சிமுத்து மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story